திருமணம் ஆகாத விரக்தியில்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ஆனைமலை, டிச. 8: ஆனைமலை அருகே உள்ள வீரல்ப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (53). கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆனந்த் குமார் (25). இவர் குடும்பத்தகராறு காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றும், திருமணம் ஆகவில்லை என்றும் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மதுபாட்டிலில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆனந்த் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகா கோட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

Related Stories:

More