நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி

கிணத்துக்கடவு, டிச.8: மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த‌ தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்களில் மாணவன் விபுல் மாநிலத்தில் முதல் இடம் பிடித்து துபாயில் நடக்க கூடிய சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். மேலும், இப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் 8 இடங்களில் வெற்றி பெற்றனர். மாணவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ கந்தசாமியின் 13வது நினைவு நாளையொட்டி ஸ்ரீ கேவிகே அறக்கட்டகளை சார்பில், கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், ஸ்ரீ கேவிகே அறக்கட்டளை அறங்காவலருமான சபரி கார்த்திகேயன் மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் லட்சுமி நாச்சிமுத்து, பேரூர் செயலாளர் சக்ரவர்த்தி, மாவட்ட பிரதிநிதி ராசு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் நந்து, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சரவணக்குமார் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: