வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஊட்டி, டிச.8: நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டத்தில் உள்ள எப்பநாடு, கடநாடு மற்றும் காவிலோரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் மற்றும் உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

துணை பதிவாளர்கள் மது, முத்துசிதம்பரம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 3 பெரும் பல ேநாக்கு கூட்டுறவு சங்கங்கள் (லேம்ப் சங்கம்) மூலம் விவசாய பயிர் கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேராதவர்கள், உறுப்பினராக சேர்ந்த விவசாய பயிர் கடன்களை பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.  இதில், என்டிசிசி வங்கி கள மேலாளர் சாரி, கடநாடு ஊர் தலைவர் சுப்பிரமணி, காவிேலாரை ஊர் தலைவர் அப்பாஜி, எப்பநாடு ஊர் தலைவர் மகேஷ்வரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் மகேஷ்வரன், குமார், அர்ஜூணன், நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்க செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாய பயிர் கடன் சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி 0423-2441254, 2443978, சரக துணை பதிவாளர் அலுவலகம் - 2444001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: