கோடப்பமந்து கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி, டிச.8: நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் ஒன்று நகரின் மையப்பகுதி வழியாக ஊட்டி ஏரியை சென்றடைகிறது. இக்கால்வாயின் இருபுறமும் உள்ள குடியிருப்புகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் உள்ள குப்பைகள் வீசப்படுவதால் கால்வாய் மாசடைகிறது. இந்த கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது, மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள படகு இல்லம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கும். மேலும், மத்திய பஸ் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கால்வாயின் தடுப்பு சுவர் இடிந்துள்ள நிலையில், கழிவுநீர் எளிதாக சாலைக்கு வந்து விடுகிறது. இந்நிலையில், மழை காரணமாக ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், தெர்மாகோல், பிளாஸ்டிக் கழிவுகள் அடித்து வரப்பட்டு கால்வாயில் குவிந்துள்ளன. இவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: