இதுபோல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது

திருப்பூர், டிச. 8:  திருப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் குருவாயூரப்பன் நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக திருப்பூர் வடக்குஅனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல்

கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குருவாயூரப்பன்முதல் வீதியில் உள்ள ஒரு காம்பவுண்டில் சோதனை நடத்தினர்.

 அந்த காம்பவுண்டில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை வைத்து பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் கார்த்திக் (எ) காசிலிங்கம் என்பவர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக் (எ) காசிலிங்கத்தை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories:

More