ஏலச்சீட்டு நடத்தி மோசடி பெண் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூர், டிச. 8:  திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், அருள்புரம் உப்பிலிபாளையம் ரோடு செந்தூர் காலனி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளாக அருள்புரத்தை சேர்ந்த தேவகி என்பவர் நடத்தி வந்த தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். இதற்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது எங்களது சீட்டு முடிந்தது.இதனால் எங்களது பணத்தை தேவகியிடம் திரும்ப கேட்டோம். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். தற்போது ஒரு வாரமாக அவரை காணவில்லை. அவர் ரூ.35 லட்சம் வரை பலரிடமும் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார். எனவே எங்களது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories:

More