அரிமா சங்கங்கள் சார்பில் உலக அமைதிக்கான ஓவியப் போட்டி

தூத்துக்குடி, டிச.8: தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம், தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா சங்கம், திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம் ஒன்றிணைந்து உலக அமைதிக்கான ஓவியப் போட்டியை நடத்தின. திருச்செந்தூர் வட்டார அளவில் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த  போட்டியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் ேசர்ந்த 100 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். உலக அமைதி ஓவிய போட்டிக்கான மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஜெயகிருஷ்ணன் போட்டிக்கான கருத்துரு பற்றி விளக்கினார். போட்டியில் தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவா முதல் பரிசினையும், பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தசரஸ்வதி 2ம் பரிசினையும், தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் பள்ளி மாணவர் சஞ்சீவ் 3ம் பரிசினையும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி பாரதி அரிமா சங்க தலைவர் வசீகரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் தர்மசீலன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்க செயலாளர் அமல்ராஜ் வரவேற்றார். திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா சங்க மண்டலத் தலைவர் அருள்குமார் வாழ்த்திப்பேசினார். வட்டாரத்தலைவர் கிருபாகரன் ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாரதி அரிமா சங்க பொருளாளர் அழகுச்சாமி நன்றி கூறினார். போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் அந்தோணி சகாயசித்ரா, கவிதா மற்றும் முத்துகுமார் பங்கேற்றனர்.

Related Stories: