திருச்சி-திண்டுக்கல் சாலையில் இன்று மாலைக்குள் இயல்பு நிலை திரும்பும் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் அமெரிக்க அகாடமி விருதிற்கு தேர்வு

திருச்சி, டிச.8: அமெரிக்க நரம்பியல் அகாடமியின் 2022ம் ஆண்டிற்கான ஏ.பி.பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருதிற்கு திருச்சி மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நரம்பியல் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் நரம்பியல் துறையில் சிறப்பாக பணியாற்றும் நரம்பியல் டாக்டர்களுக்கு ஏ.பி.பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருது வழங்கி கவுரவித்து வருகிறது. வரும் 2022ம் ஆண்டிற்கான ஏ.பி.பேக்கர் விருதிற்கு திருச்சி மூளை நரம்பியல் நிபுணரும் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட டாக்டர் அலீம், இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் கிளாஸ்கோவின் டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More