மாயனூர் காவிரியில் குதித்த வாலிபர் உடல் திருச்சியில் மீட்பு

திருச்சி, டிச.8: திருச்சி மாவட்டம் தொட்டியம் சீலபிள்ளையார்புதூர் இலுப்பைதோப்பு தெருவை சேர்ந்தவர் வள்ளான் மகன் சின்னையன்(31). இவர் கடந்த 2ம் தேதி கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரியாற்று கதவணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சின்னையன் உடலை தேடி வந்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரங்கம் மேலூர் அருகே உள்ள கல்லணை காவிரியாற்றில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக ரங்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரின் ரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர், சின்னையன் என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களை வரவழைத்து அவரது உடலை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories:

More