அரியாறு கரைகள் பலவீனம் 2 இடங்களில் உடைப்பு; 2 இடங்களில் அரிப்பு

திருச்சி புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலம் அருகே அரியாறு ஆற்றில் கடந்த 28ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் சவுக்குக்கட்டைகள் அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்தினம் மணப்பாறையில் பெய்த மழையால் அரியாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு வலது கரையில் அடைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் மேல் பகுதியில் கரை உடைந்தது. தவிர, வலது கரையில் உடைபட்ட பகுதிக்கு நேர் எதிரே இடது கரை பகுதியில் இரண்டு இடங்களில் பாதி கரை அரித்துச்செல்லப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சவுக்குக்கட்டை அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் சவுக்குக்கட்டைகள் அடிக்கப்பட்டுள்ளது. மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. வெள்ள்ம வடிந்த பின் மணல் மூட்டைகள் கொண்டு அந்த இடத்தில் அடைக்கும் பணி துவங்கும். மொத்தத்தில் அரியாறு இரண்டு கரைகளில் வலது கரையில் இரண்டு இடங்களில் உடைப்பும், இடது கரையில் இரண்டு இடங்களில் கரை அரிக்கப்பட்டு கரை பலவீனமாகவும் காணப்படுகிறது.

Related Stories: