அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சியுடன் மாதிரி தேர்வு நடத்த முடிவு வினா வங்கி தொகுப்பு வழங்கவும் திட்டம் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள

வேலூர், டிச.8: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான மாதிரித்தேர்வுகள் நடத்தவும், வினா வங்கி தொகுப்பு வழங்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தேர்விலும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜேஇஇ நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் ஏழை அடித்தட்டை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவக்கல்வி வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், அதனால் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்று, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், தேர்வுகளுக்கான வினா வங்கி புத்தகம் வழங்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

Related Stories: