திருத்துறைப்பூண்டியில் விபத்து எம்டி காஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வேன் டிரான்ஸ்பர்மர் மின்கம்பத்தில் மோதியது

திருத்துறைப்பூண்டி, டிச. 8: திருத்துறைப்பூண்டி டவுனில் இருந்து எம்டி காஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வேன் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள அண்ணாநகருக்கு ெசன்றது. ஒரத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ஹரிஹரன் (25) வேனை ஓட்டினார். முத்துப்பேட்டை சாலையை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வளைவில் எதிரே வாகனம் வந்ததால் நிலைதடுமாறி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஒரமாக இருந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளது. இதில் வேன் டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். இதில் டிரான்ஸ்பர்மர் மின்கம்பத்தில் இரண்டு மின்கம்பம் முறிந்து சேதமானது. வேனில் எம்டிகேஸ் சிலிண்டர் ஏற்றி வந்ததால் பெறும் விபத்தோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: