பைபாஸ் சாலையில் பாதுகாப்பின்றி செல்லும் தென்னைமட்டை லாரிகள்

கரூர், டிச.8: கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் தென்னை மட்டை போன்றவற்றை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பின்றி திறந்த நிலையில் வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் நாமக்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில், கரூர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக் கொண்டு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. அந்த வாகனங்கள் தென்னை மட்டைகளை ஏற்றிக் கொண்டு தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், தென்னை மட்டைகள் ஆங்காங்கே சிதறி சாலையில் விழுகிறது. இதன் காரணமாக சாலையில் அதிக வேகத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, தென்னை மட்டை போன்றவற்றை ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனங்கள் தார்ப்பாய் போடாமல் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பைபாஸ் சாலையில், தென்னை மட்டை போன்றவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: