நாகை உழவர்சந்தை கொடிநாள் வசூலில் இலக்கைவிட கூடுதலாக வழங்கிட வேண்டும்

நாகை, டிச.8: கொடிநாள் வசூலில் இலக்கைவிட கூடுதலாக வழங்கிட வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்தார். படைவீரர் கொடிநாள் அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு நிதி செலுத்தி வசூலை நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வசூல் அதிகம் செய்தவர்களுக்கும், ஓய்வுபெற்ற ராணுவத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது: நமது தாயகத்தை காக்குமம் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றுமம் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த ரூ.49 லட்சத்து 69 ஆயிரம் கொடி நாள் வசூலில் நாகை மாவட்டம் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக ரூ.52 லட்சத்து 91 ஆயிரம் நிதி வசூலித்துள்ளது. நடப்பாண்டில் அரசின் இலக்கு ரூ.59 லட்சத்து 63 ஆயிரம் ஆகும். இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல கொடிநாள் வசூலில் நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக பலமடங்காக எய்திட வேண்டும் என்றார். கொடிநாள் விழாவின் போது 2018-ல் அதிக நிதி வசூல் செய்தமைக்காக ஊராட்சிகள் உதவி இயக்குநர் ராஜசேகருக்கு தலைமைச் செயலாளர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஆயிஷாபேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: