இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

நாகை, டிச.8: இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாகை அவுரித் திடலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் வீரையன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் வரவேற்றார். செயலாளர் ராஜு முன்னிலை வகித்தார். பழங்குடி மக்கள் நாள் தோறும் சந்திக்கும் இன்னல்களை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஜெய்பீம் படக் குழுவினர்களுக்கும், பழங்குடியின குழந்தைகளுக்கு கல்விக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த நடிகை ஜோதிகாவுக்கும், பழங்குடியினத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட்ட முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பழங்குடி இன, மேளங்களை வாசித்த படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செல்லூர், பொறக்குடி, நீலப்பாடி பகுதியை சேர்ந்த இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More