மாமூல் கேட்டு தகராறு

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனராம்(28). அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். மேலும், அவரை சரமாரியாக தாக்கி, கடையில் இருந்த சுமார் 30,000 மதிப்புள்ள பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திவிட்டு,  தப்பி சென்றனர். புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(42), முருகன்(28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More