இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு: ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் 26.வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் நடைபெறாததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைவும், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு கற்றல் ஈடுபாட்டை உருவாக்கவும், விருப்பத்தோடு பள்ளிக்கு வரவும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி வீடு, வீடாக சென்று மாணவர்களுக்கு கல்வி கற்க செய்யும் ஆர்வத்தை உருவாக்கும் தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் சதா பாஸ்கரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், காந்திமதிநாதன், வட்டார கல்வி அலுவலர் தணிகாசலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீகாவேல், ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்தலிங்கம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியை ஜோசப் பாத் அன்பரசி நன்றி கூறினார்.

Related Stories: