திமுக அவசர ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் இன்று (டிச.8) மதியம் 12 மணியளவில் பூந்தமல்லி, ஹரிஹரன் திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெறுகிறது.

இதில் பூந்தமல்லி நகர செயலாளர் பூவை.எம்.ரவிக்குமார் வரவேற்கிறார். இதில்,  தலைமை செயற்குழு உறுப்பினரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ரமேஷ், காயத்ரி தரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜே.சீனிவாசன், பதாகை வி.சிங்காரம்,  ஆர்.எஸ்.ராஜராஜன், வக்கீல் கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் மற்றும் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

More