குளத்தில் மூழ்கி விவசாயி சாவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த குமரன்நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன்(49). விவசாயி. நேற்று முன்தினம் மாலை விவசாயம் செய்வதற்காக வயல்வெளிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வயல்வெளியை ஒட்டியுள்ள கோங்கல் பகுதியில் உள்ள குளத்தில் அழகேசன் சடலம் நேற்று காலை ஒதுங்கியது. தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More