கஞ்சா விற்ற இருவர் கைது

பொன்னேரி: பொன்னேரி, சின்னகாவனம் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி டிஎஸ்பி பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை சின்னகாவனம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, பழவேற்காடு, பொன்னேரி, புதுவாயல் ஆகிய 3 வழிச்சாலை சந்திக்கும் பகுதியில், ஒரு ஆண், பெண், அவ்வழியாக வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரிந்தது. இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த வாணி(47), தீபக்(25) என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More