வீட்டை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பிராமண தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (48). இவரது மனைவி புனிதா (39). மஹேந்திரா தொழில் பூங்காவில் வேலை செய்கின்றனர். நேற்று காலை 2 பேரும், வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவில் இருந்த  7.5 சவரன் நகை, 6 ஜோடி கொலுசு, ₹30 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More