65ம் ஆண்டு நினைவு நாள் அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

திருச்சி, டிச. 7: திருச்சியில் சட்டமேதை அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏ பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் தர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில் சேரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் வெல்லமண்டி சோமு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More