ஐயப்ப பக்தர்களுக்காக திருச்சி-பம்பைக்கு அரசு விரைவு பஸ் சேவை துவக்கம்

திருச்சி, டிச.7: தமிழகத்தில் இருந்து கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் லட்சக்கணக்காணோர் விரதம் இருந்து பயணம் மேற்கொள்வார்கள். இவர்கள் சொந்த காரிலோ, வாடகை வாகனங்களிலோ செல்வார்கள். சில பக்தர்கள் மாலை அணிந்து எளிமையாக பஸ்களில் பயணம் செய்வார்கள். இவர்களுக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி தற்போது திருச்சியில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பைக்கு சிறப்பு பஸ் சேவையை துவங்கியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு திருச்சியில் இருந்து இந்த பஸ் சேவை புறப்படுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் அரசு பஸ் சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: