ஈரோடு, கோபி, பவானியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 7: ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பாபர் மசூதி இடிப்பு தின்தையொட்டி எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் அபுபக்கர்சித்திக் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் முகமது உசேன், சிவில் உரிமை சங்கத்தின் மாநில தலைவர் கண குறிஞ்சி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், திராவிடர் விடுதலை கழக அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவர் நிலவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோபி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தொகுதி தலைவர் தஸ்தகீர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில பொதுச்செயலாளர் ரவூப்நிஸ்தார் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹசின் காமினூன் செயலாளர் அஜ்மல்ஹூசைன், துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் சமீருல்லா, பொருளாளார் ஹபிபுல்லாஷரீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பவானி: அந்தியூர் -மேட்டூர் பிரிவில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் சிராஜுதின் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சையது கரிம் பயாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலீம்ராஜா, தமுமுக மாவட்டப் பொருளாளர் சையத் அன்வர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.கமருதீன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தமுமுக தொண்டரணி மாநிலப் பொருளாளர் எஸ்.முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் ரிஃபாகத்துல்லாஹ், ரபீக், முஹமது அன்ஸாரி, முபாரக் அலி, அப்துல் வாஹித், எஸ்.யாஸீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: