பண்ணாரி சோதனை சாவடியில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரம்

சத்தியமங்கலம், டிச.7:  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று சத்தியமங்கலம் வட்டார சுகாதார துறை அலுவலர்கள் பண்ணாரி சோதனை சாவடியில் முகாம் அமைத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொண்டனர். மேலும் தமிழகத்திற்கு வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதனால் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: