கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எம்பெட்டெட் சிஸ்டம் சிறப்பு மையம் துவக்கம்

கோவை, டிச. 7: கோவை குனியமுத்தூரில் உள்ள  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்பெட்டெட் சிஸ்டம் சிறப்பு மையம் கேப்ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இக்கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, கேப்ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரா ரெட்டி, துணை தலைவர் ஜெகதீஷ் குஞ்சம் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரசாத் செட்யே ஆகியோர் கையெழுத்திட்டனர். இம்மையத்தில், கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி, தொழில் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை மற்றும் தொழில்திறன் உறுதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது தொழில்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்திற்கு ஏற்ப, ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த மையம் உதவுகிறது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜேனட், இ.சி.இ. துறை தலைவர் சோபியா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: