பழநி அருகே டூவீலர் விபத்துகளில்

பழநி, டிச. 7: பழநி அருகே ஆயக்குடி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் பழநி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஓபுளாபுரம் அருகே வந்த போது விருப்பாட்சியை சேர்ந்த ராஜேஸ்குமார் தனது பைக்கை சவுந்தரராஜன் பைக் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த சவுந்தரராஜன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பழநி அருகே கீரனூரை சேர்ந்தவர் வேலு (65). இவர் தனது மனைவி முருகாயி (60), பேரன் அஸ்வின் (10) ஆகியோருடன் பைக்கில் பழநி- புதுதாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கருப்பணகவுண்டன் வலசு பகுதி அருகே வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேலுவின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வேலு, அஸ்வின் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More