வைகையில் வெள்ளப்பெருக்கு

மதுரை, டிச.7: மதுரை வைகை ஆற்றில் நேற்று கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கலெக்டர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை வைகை அணையில் 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் தரைப்பாலம் பகுதியிலுள்ள சர்வீஸ் ரோடு அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வைகையாற்று பகுதியை கலெக்டர் அனீஷ் சேகர் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவோ வேண்டாம் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More