ஊட்டச்சத்து விதைகள் விநியோகம்

தேவதானப்பட்டி, டிச. 7:தேவதானப்பட்டி அருகே, சில்வார்பட்டி ஊராட்சியில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்ட திட்டத்தின் கீழ், மானிய விலையில் மாடித்தோட்ட கீரைச்செடிகள், ஊரகப்பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க, மானிய விலையில் காய்கறி விதைகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து கீரைகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின், விவசாயிகள் நலச்சங்க தலைவர் முத்துக்காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை அலுவலர் பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.    

 இதில், ஊராட்சி துணை தலைவர் சுகந்தி சின்னச்சாமி, சில்வார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தெய்வேந்திரன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரெங்கராஜன், பால்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். விவசாயிகள் நலச்சங்க செயலாளர் கே.எஸ்.முத்துக்காமாட்சி நன்றி கூறினார்.    உத்தமபாளையம் சப்ஜெயிலுக்குள் புகுந்த மழைநீர்.தேனியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பரிசு வழங்கினார்.

Related Stories: