உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தேனியில் கிரிக்கெட் போட்டி

தேனி. டிச. 7: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி தேனி மாவட்ட திமுக இளைஞரணி, தேனி நகர இளைஞரணி சார்பில் பொம்மையகவுண்டன்பட்டியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி 2 நாள் நடந்தது. இதில், 20 அணிகள் கலந்து கொண்டன. முதல்நாளில் போட்டியை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், அல்லிநகரம் அணியும் பொம்மையகவுண்டன்பட்டி அணியும் மோதின. இதில், அல்லிநகரம் வின்ஸ்டார் அணி 81 ரன்களை பெற்று முதலிடமும், பொம்மையகவுண்டன்பட்டி பி.கே. அணி 71 ரன்களை பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா மாலையில் நடந்தது.     

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், நகர திமுக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பரணீஸ்வரன் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார், செல்லத்துரை செய்தனர். விழாவில், முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.7 ஆயிரம், ரத்தினம் நகர் அணிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜசேகர், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பண்ணை ரவி, துரைராஜ், பவுன்ராஜ், ரத்தினம் நகர் கிளை செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.       

Related Stories: