மஞ்சள் நோய் தாக்குதலால் நெற்பயிர் சேதம்

சேத்தியாத்தோப்பு, டிச. 7: கீரப்பாளையம் வட்டாரத்தின் சுற்று பகுதிகளான பரதூர், ஒரத்தூர் பகுதியில் வயலில் மஞ்சள் நோய் தாக்கம் குறித்து வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார். கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஒரத்தூர், சாக்கங்குடி, தேவங்குடி, துணிசரமேடு, பரதூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தேங்கி நடவு மற்றும் விதை நேர்த்தி நாற்றுகள் அழுகியது. விவசாயிகள் உரமிட்டு பாதிப்பை சரிசெய்த நிலையில், நாற்றுகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கீரப்பாளையம் பரதூர், ஒரத்தூர் பகுதியில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாலசுப்ரமணியன், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்கள் பாரதிகுமார் (பயிர்பெருக்கம்), நடராஜன்( விதைதொழில்நுட்பம்), விருதாச்சலம் (பயிர் நோயியல்) குழுவினர்களுடன் ஆய்வு செய்தனர். அப்போது வேளாண் உதவி இயக்குனர் சித்ரா, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், புகழேந்தி மற்றும் வேளாண் துணை அலுவலர் கோபி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: