கிடப்பில் சாலை பணி: பொதுமக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில், டிச. 7:  காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் எள்ளேரி பாத்திமா தெருவில் உள்ள சாலை அந்த கிராம மக்களின் பிரதான முக்கிய சாலையாக விளங்குகிறது. பாத்திமாதெரு, முதலியார் தெரு ஆகிய சாலைகளை புதிதாக அமைக்க வேண்டி ஒன்றிய நிர்வாகம் சார்பில் 500 மீட்டர் சாலைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாத்திமா சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. இந்நிலையில் சாலை பணி ஒப்பந்ததாரரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

 இதனால் எள்ளேரி கிராம மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பாத்திமாதெரு சாலை பணியை உடனடியாக தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: