சோம வாரத்தையொட்டி நாட்டு மடம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வேதாரண்யம், டிச.7: வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories:

More