காரைக்காலில் சிவப்பு நிற ரேசன் கார்டு மாற்றும் முகாம்

காரைக்கால், டிச.7: காரைக்கால் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பாக நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு, காரைக்கால் வடக்கு தொகுதியின் குடும்ப அட்டை சம்பந்தமான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கோவில்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இதற்கான முகாமினை புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணக்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்சியில் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் ஷர்மா, துணை மாவட்ட கலெக்டர் (வருவாய்) ஆதர்ஷ், குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் சுபாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உட்பட 100க்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாய் சரவணன் கூறுகையில் தகுதியுள்ள அனைவருக்கும் சிகப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும், இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். முகாமில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் மற்றும் விலாசம் மாற்றம் போன்ற பணிகளும் நடைபெறும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More