நாகை மாவட்ட ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை டிச.10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்

நாகை,டிச.7: நாகை மாவட்ட ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜனவரி மாதம் 4ம் தேதி காலை 10- 30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீரக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் கலந்து கொள்ள உள்ளார். நாகை மாவட்டத்தில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள் இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களது குறை தொடர்பான மனுக்களை இரண்டு பிரதிகளில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), கலெக்டர் அலுவலகம் நாகை என்ற முகவரிக்கு தெளிவான கையெழுத்திலோ அல்லது தட்டச்சு செய்தோ பெயர், பதவி மற்றும் முகவரி, ஓய்வு பெறும் போது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள் மற்றும் ஆண்டு, ஓய்வூதியம் தொடர்பான குறைகள் விபரம், குறைகள் எந்த அலுவலகத்தில் அலுவலரிடத்தில் நிலுவையில் உள்ளது, ஓய்வூதிய கொடுப்பாணை எண் ஆகிய விவரங்களுடன் வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கத்திரிக்காய்    ரூ.100

வெண்டைக்காய்    100

தக்காளி    60 80

கொத்தவரை    80

சுரைக்காய்    40  

புடலங்காய்    60

அவரைக்காய்    100

பாகற்காய்    80

முருங்கைக்காய்    100

வாழைக்காய்(3)    10

வாழைப்பூ    10

சின்ன வெங்காயம்    50.60

பல்லாரி     35, 40, 50

பச்சை மிளகாய்    60

முள்ளங்கி    ரூ.80

பூசணிக்காய்    20

மாங்காய் (ஒட்டு)    70

உருளைக்கிழங்கு    40

கேரட்    80

பீன்ஸ்    90

பீட்ரூட்    50 60

முட்டைக்கோஸ்    50

செளசெள    40

தேங்காய்    10, 20.

பரங்கிக்காய்    25

காலிஃப்ளவர்    100

பீர்க்கங்காய்    100

Related Stories: