காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

காரைக்கால், டிச.7: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள் சுமார் 250 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும் நடைபெற்று வரும் நிலையில் 1 முதல் 8 வகுப்புகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி பள்ளிகளை திறக்க முற்பட்டபோது கடுமையான தொடர் மழை காரணமாக பள்ளிகள் திறப்பு காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்த 6ம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். இதன்படி நேற்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

Related Stories:

More