வேதாரண்யத்தில் ஏரியில் குளிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம்

வேதாரண்யம், டிச.7: வேதாரண்யம் நாகை சாலையில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வேதாமிர்த ஏரி. இந்த ஏரியின் அருகே வசிப்பவர் மணிகண்டன் (41). இவர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த குமாரசாமி (36) என்பவரும் அங்கு வந்து குளித்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பின்னர் இருவரும் குளித்துவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை சேர்ந்த குமாரசாமி மற்றும் சிலர் மணிகண்டனின் வீட்டிற்கு வந்து கம்பி மற்றும் கட்டையால் மணிகண்டனை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை நாகை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல குமாரசாமியை மணிகண்டன் தரப்பில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குமாரசாமி வேதாரண்யம் அரசு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் இதுதொடர்பாக இரு தரப்பும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories:

More