ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை இறங்கு முகம்

க.பரமத்தி, டிச.7: சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் இரு வாரங்களாக இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 260 மூட்டை கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.102, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.109, ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லை. இதேபோல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 15,460 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.23, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.30, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ. 1 குறைந்து ஏலம் போனது. தேங்காய் இரு வாரங்களாக இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கத்திரிக்காய்    ரூ.80

வெண்டைக்காய்     70

தக்காளி     80

புடலங்காய்     50

பீர்க்கங்காய்     75

அவரைக்காய்     80

பாகற்காய்     65

கொத்தவரங்காய்     40

முள்ளங்கி     40

பரங்கிக்காய்     15

முருங்கைக்காய்     70

வாழைக்காய்     26

வெங்காயம்     45

வெங்காயம் பெல்லாரி     52

பச்சைமிளகாய்    ரூ.30

கொத்தமல்லி     55

புதினா     40

சேனைக்கிழங்கு     30

கருணைகிழங்கு     50

சேப்பங்கிழங்கு     40

எலுமிச்சைபழம்     70

பூவன் பழம்     40

ரஸ்தாளி     50

கேரட்     58

முட்டைகோஸ்     30

பீட்ருட்     50

உருளைக்கிழங்கு     40

இஞ்சி     50

பெட்ரோல் லிட்டர்: ரூ.101.70

1 கிராம் .... ரூ.4,620

1 பவுன் .... ரூ.36,960

டீசல் லிட்டர்: ரூ.91.76

Related Stories: