நடவடிக்கை எடுக்க கோரிக்கை பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் நல்வாழ்வு பயிற்சி முகாம்

வேலாயுதம்பாளையம், டிச.7: பெரியகுளத்துபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் பெரியகுளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் ஆயுஷ்மான் பாரத் இயக்கம் மற்றும் மாநில கல்வித்துறை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் பவித்ரா தலைமை வகித்தார். அப்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க ஆசிரியர் தூதுவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆரோக்கியமாக வளருதல், பாலின சமத்துவம், ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சமத்துவம், எச்ஐவி தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட 11 வகையான தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை வட்டார கல்வி அலுவலர் சந்திரிகா பார்வையிட்டார். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்தியவதி செய்திருந்தார். பயிற்சி முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: