கபீர்புரஸ்கர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், டிச.6: சமூக நல்லிணக்கத்திற்கான கபீர்புரஸ்கர் விருதிற்கு டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கபீர்புரஸ்கர் விருது 2022 குடியரசு தினத்தில் முதல்வரால் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கு தகுதியான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து டிச.10க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முதல்பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்கள்  விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் டிச.10க்குள் சமர்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் வழியாக ராமலிங்கபுரம் செல்லும் சாலையில் வாகைக்குளம் கண்மாய் நிறைந்து தரைப்பாலம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More