சிவகாசி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நலத்திட்ட உதவி வழங்கல்

 சிவகாசி, டிச. 6: சிவகாசி அருகே  மூன்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 204 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவகாசி  அருகே அனுப்பங்குளம், ஆனைக்குட்டம், செவலூர் ஆகிய  ஊராட்சிகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு  முகாம்கள் உள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்டி இந்த 3  முகாம்களில் வசிக்கும் 204 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு, பாத்திரங்கள், 2021- 22ம் ஆண்டுக்கு புதிய துணிகள், முதலமைச்சர்  மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை  உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டது.

சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான விவேகன்ராஜ் தலமை வகித்தார். அனுப்பன்குளம் முகாமில் நலத்திட்ட தொகுப்புகளை சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன், சிவகாசி சப்- கலெக்டர் பிரதிவிராஜ் வழங்கினர். ஆனைக்குட்டம், செவலூர் முகாம்களில் விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ராமராஜ், முகாம் வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜன், அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ், ஆனைக்குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், சுக்ரவார்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: