ராஜபாளையத்தில் மழையால் வீடு இடிந்தது

ராஜபாளையம், டிச. 6: ராஜபாளையம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி(65). இவரது மனைவி சுப்பு(58). இவர்கள் இருவரும் சிறிய மண் வீட்டில் வசித்து வந்தனர். தொடர்ந்து நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக வீட்டுச்சுவர்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் சிறிய கம்புகளை முட்டுக்கொடுத்து அங்கேயே இருவரும் வசித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி இருவரும் உயிர் தப்பினர். தகவலறிந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கோவிந்தசாமியின் இடிந்த வீட்டை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

Related Stories:

More