சிங்கராஜபுரம் ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்புகள் ஆய்வு

வருசநாடு, டிச.6: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அல்லால் ஓடையில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்தது. சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய்கள், மின் வயர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. மேலும் 30 வருடங்கள் பழமையான தென்னை, இலவம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.  சிங்கராஜபுரம் குடிநீர் மின் மோட்டார் குழியும் மணல் குவியல் மூடியுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

மழை பாதிப்பை சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் நேரில் ஆய்வு செய்தனர். இதில் அனைத்து வார்டு உறுப்பினர்கள்,  குடிநீர் ஆப்ரேட்டர்கள் உடன் இருந்தனர். மேலும் பொதுமக்களின் குடிநீர் தேவையை விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு மற்றும் ஆடு, மாடு, மேய்ச்சலுக்கு செல்பவர்கள் ஓடைகளை கடந்து கவனமாக வர வேண்டும், மழை நேரங்களில் மின் சாதனங்களை மிக கவனமாக கையாள வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: