சாரணர் மாணவர்கள் தேர்வு

உத்தமபாளையம், டிச.6: உத்தமபாளையம் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாரண மாணவர்கள் தேர்வு நடைபெற்றது. தமிழ் நாடு பாரத சாரண, சாரணீய அமைப்பானது பள்ளி மாணவர்கள் மாணவியருக்கு நற்பண்புகளை வளர்க்கும் அமைப்பாகும். உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் இந்த அமைப்பின் உயரிய விருதான தமிழக ஆளுநர் விருதிற்கான போட்டி தேர்வுகள் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  109 சாரண மாணவர்கள், 33 சாரணீய மாணவிகள் பங்கேற்றனர். மதுரை மாவட்ட மண்டல பொறுப்பாளர் சங்கிலிகாளை மற்றும் மாநில பயிற்று ஆணையர் நாச்சியார், உத்தமபாளையம் கல்வி மாவட்ட செயலாளர் பாண்டி, பாஸ்கரன், பிரகாஷ், ராஜூ, சுஜாதா, சுஜிதா, மேரி உள்ளிட்ட உதவி தேர்வர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More