தொடர்மழையால் ஆண்டிபட்டி பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

ஆண்டிபட்டி, டிச. 6:தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களாகும். இந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று போகத்தில் ஒரு போகத்தில் ஒரு போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த பகுதிகளில் நெல் பயிரிடப்படும். மற்ற காலங்களில் நீர்இருப்பை பொருத்து தக்காளி, கரும்பு, கத்தரி போன்ற தோட்டப்பயிர்கள் பயிரிடப்படும்.

 இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்குப்பருவமழை தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்ததை தொடர்ந்து வைகை ஆற்றிலும், முல்லைப் பெரியாற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால், குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் நெல் சாகுபடி செய்யம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதால், நிலத்தை உழுது நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் விளைந்து அறுவடை செய்ய 70 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும். தற்போது வைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணைகளில் நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்து உள்ளதால், இந்த ஆண்டு நெல்பயிர்களை தண்ணீர் பற்றாக்குறையின்றி அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: