மண்வள தின நிகழ்ச்சி

சிவகங்கை, டிச.6: சிவகங்கையில் உலக மண் வள தின நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மண்வளமும் பயிர்வளமும், பயிர்களுக்கான மேலாண்மை, மீன்வளர்ப்பு, மண்ணின் தன்மைக்கேற்ப சிறுதானியப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பம், உப்பின் தன்மையை குறைத்து உற்பத்தியை பெருக்கும் நோக்கில் மாவட்டத்தில் விவசாயிகள் மண்வளத்தை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப செய்திகள், மண்பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குநர்(உழவர் பயிற்சி நிலையம்) கதிரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம், வேளாண்மை உதவி இயக்குநர் பரமேஸ்வரன், குன்றக்குடி பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தூர்குமரன் மற்றும் வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More