ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சியடைந்த கிராமங்களாக மாற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, டிச.6: காரைக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், நகரசெயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘மக்களுக்காக முதல்வர் தொடர்ந்து களத்தில் நின்று செயல்பட்டு வருகிறார். கடந்த நவம்பர் 7ம் தேதி துவங்கி இதுநாள் வரை தொடர்ந்து இரவு, பகல் பாராது மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி முழுமையான வளர்ச்சியடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக ஏற்படுத்திட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார். ஒன்றிய செயலாளர்கள் சின்னத்துரை, டாக்டர் ஆனந்த், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, சிறுபான்மை பிரிவு அன்னைமைக்கேல், நகர துணைச்செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் சொக்கு, அன்பு, முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் நாராயணன், சுப்பையா, மாணவர்அணி அசரப், கனி, அருணாசலம், மகளிர்அணி சத்யாராஜா, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More