இல்லம் தேடி கல்வி திட்டம்

காரைக்குடி, டிச.6: காரைக்குடி அருகே பீர்க்கலைகாடு பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலைக்குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சாக்கோட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் சகாயச் செல்வன் தன்னார்வலர்களுக்கு படிவங்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் வனிதா, கண்ணன், ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி, கவிதா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பனம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் சண்முகவேல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கப்பட்டது.

Related Stories:

More