ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி

பரமக்குடி,டிச.6:  பரமக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் மாவட்ட அதிமுக மற்றும் நகர அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ முத்தையா தலைமையில், நகர் செயலாளர் ஜமால், நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான் ஆகியோர் முன்னிலை யில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி கிழக்குப் பகுதியில் ஜெயலலிதாவின் படத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமையில் அதிமுகவினர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More