×

கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதி வாலிபர் பலி வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாயல்குடி, டிச.6: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கார், டூவீலர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். சாலையில் வேகத்தை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் காளீஸ்வரன்(21). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். நேற்று வாலிநோக்கத்திலிருந்து கொத்தங்குளம் செல்ல டூவீலரில் வந்துள்ளார். வாலிநோக்கம் விலக்கு ரோட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஏறும்போது எதிரே தங்கச்சிமடத்திலிருந்து கேரளா சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காளீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம்(27) மீது வாலிநோக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி, ராமநாதபுரம் வழியாக நாகப்பட்டிணத்திற்கு கிழக்கு கடற்கரை செல்கிறது. ராமேஸ்வரம் உள்ளதால் அதிகமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கிறது. இதனை போன்று கடற்கரை சாலை என்பதால் மீன், உப்பு, புளு மெட்டல் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.

சாயல்குடி முதல் ராமநாதபுரம் வரை சாலையோரம் மற்றும் விலக்கு பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனை போன்று வாலிநோக்கம், கீழக்கிடாரம், தனிச்சியம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பஸ்சுக்காக வாலிநோக்கம் விலக்கு ரோட்டிற்கு வந்து செல்கின்றனர். அப்போது வரும் போது விலக்கு ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் ஒளிரும் முன் எச்சரிக்கை போர்டுகள், கோடுகளுடன் கூடிய வேகத்தடை அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : East Coast Road ,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்